கன்னியாகுமரி, நவ. 15– பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞி சுவாமி கல்வியியல் கல்லூ ரியில் நடைபெற்றது.
பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர் பெரியார் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலை நோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும், ஆகிய தலைப்புகளில் நடை பெற்றது.
கல்லூரி தாளாளர் .ஆல்வின் மதன் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக த் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் கழக காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். கல்லூரி முதல்வர் சா.ஜாஸ்மின் ஷீலா பேர்ணி போட்டியினை ஒருங்கிணைத்தார். அதிகமான மாணவ, மாணவியர்கள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று பெரியாருடைய வரலாறு குறித்து பேசினர். கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் நன்றி கூறினார்.
