அரூர், மே 10- அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.5.2023 அன்று மாலை 5 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச் செல்வி அச்சகத்தில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜ் தலைமையில், மாவட்ட கழக தலைவர் கு.தங்கராஜ், மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், ஒன் றிய தலைவர் பெ. சிவலிங்கம் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற் றது.
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தை சிறப்பாக தொடர்ந்து நடத்தி வரும் மண்டல திராவிடர் கழக செயலாளரும், விடுதலை வாசகர் வட்ட செய லாளருமான பழ. பிரபு விடுதலை வாசர் வட்டத்தை தொடர்ந்து எப்படி நடத்துவது, விடுதலை வாசகர் வட்டத்தில் யார் யாரை உறுப்பினராக சேர்ப்பது, வாசகர் வட்டம் நடைபெற தேவையான பொருளாதார உதவி பெறுவது, சிறப்பானவர்களை தேர்வு செய்து பாராட்டுவது, குறித்து வழிகாட்டி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கழக இளைஞரணி மண்டல செயலாளர் இ.சமரசம், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பாண்டியன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.குபேந்திரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் வேலு சாமி, மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் மு. பிரபாகரன்,வாசகர் வட்ட துணை செயலாளர் சர வணன், எழுத்தாளர் சுந்தர்ராஜன், தன்னையறிதல் பயிற்சியாளர் கு.பால கிருஷ்ணன், வேப்பிலைப் பட்டி தீ. அமுல் செல்வம், தமிழ்ச் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்தி பாராட் டினர். இறுதியாக விடுதலை வாச கம் வட்ட செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.