சம்பத்துராயன்பேட்டை, மே 10- 6.5.2023 அன்று மாலை 5 மணிக்கு இராணிப் பேட்டை மாவட்டம் சம்பத்துராயன்பேட்டை யில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.
திராவிட மாணவர்கழக மாநில அமைப்பாளர் பொறியாளர் இரா.செந் தூரபாண்டியன் தலைமை வகித்தார்.
மாநில கழக அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், மதிமுக பேச்சாளர் ஆறுமுகம், திராவிடர்கழக தொழிலாளரணி மாவட்டத் தலைவர் ஞானப்பிரகாசம் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.
நிறைவாக கழகச்சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் “பகுத்தறிவு வாழ்வே பண்பட்ட வாழ்வு’ என்ற தலைப்பில் ஒருமணிநேரம் சிறப்புரையாற்றினார். கல்லூரி, பள்ளி மாணவர்கள் கேள்வி களுக்கு பதிலளிக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட மாணவர்கழக தலைவர் லோ.அறிவுமணி நன்றி கூறினார்.