சென்னை, நவ.14- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள், சங்கத்தின ரிடம் பெறப்பட்ட கருத்துகள் வருமாறு:-
கோரிக்கை நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 55 சதவீதத் திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தியதோடு, இவ்வுயர்வினை ஜூலை மாதத்திலிருந்து வழங்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளிலிருந்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 4.10.2025 அன்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந் தோம். இக்கோரிக்கையை நிறைவேற்றி தந்த தோடு 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் விதமாக நிலுவையின்றி ஜூலை 1-ந்தேதியில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் தெரி வித்தார்.
அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றிகளை செவிலியர்கள் அனைவரும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் அகவிலைப்படியை உயர்த்தி தந்து எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் 99 சதவீதம் பெண்களை கொண்டு செவிலியர் பணி சுழல்கிறது. அப்படி இருக்கும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை கொண்டு செல்லும் இந்த அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நர்சுகள் பொதுநல சங்க மாநில பொதுச் செய லாளர் கோபால் தேவி (செவிலியர் கண் காணிப்பாளர்) தெரிவித்தார்.
