அறிவியல்தான் கடவுளை காப்பாற்ற வேண்டுமோ?
சபரிமலை தங்கக்கவச முறைகேடு: கோயிலில்
கொச்சி, நவ. 14 சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, கோயிலுக்குள் அறிவியல் சோதனைகளை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்அய்டி) கேரள உயர்நீதிமன்றம் நேற்று (13.11.2025) அன்று அனுமதி வழங்கியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலின் கருவறைக் கத வுகள், துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தங்கக் கவசங்களைப் புதுப்பித்த செலவு களை ஏற்றுக்கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் முன்னாள் தேவஸ்வம் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.
காணாமல் போன தங்கத்தின் அளவைத் தீர்மானிப்பதற்காக துவார பாலகர் சிலைகளில் அறிவியல் பரி சோதனைகளை நடத்த நீதிமன்றத்திடம் எஸ்அய்டி அனுமதி கோரியிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் 17.11.2025 சோதனைகளை நடத்த எஸ்அய்டிக்கு அனுமதி அளித்துள்ளது.
தாமதம்
முதலில் நாளை (15.11.2025) சோதனைகளை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், கோயில் தந்திரியின் (தலைமைப் பூஜாரி) கருத்தைக் கேட்ட போது, சன்னதிக்கு அருகில் அறிவியல் பரிசோதனை நடத்துவதற்கு முன்னர் தெய்வ அனுமதியைப் பெற சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், சோதனைகள் 17.11.2025 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.
அன்றைய நாள் உச்ச பூஜைக்குப் பிறகும், பிற்பகல் ஒரு மணிக்குக் கோயில் மூடப்பட்ட பிறகும் இந்தச் சோதனை நடத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
