புதுடில்லி, நவ. 14- இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் நடிகர் சோமேந்திர சோலங்கி. சீன பெண்ணை மணந்த அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
பொதுவாக குழந்தை கள் உள்ள வீடு என்றாலே பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும். அந்தவகையில், சோமேந்திர சோலங்கியின் குழந்தையும் இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்தது.
இதற்கு தீர்வாக அந்த குழந்தையின் தாத்தா சீனாவில் இருந்து ஒரு நவீன எந்திரத்தை வாங்கி சென்று அவர்க ளுக்கு பரிசளித்தார்.
அந்த எந்திரத்தில் 5 விரல்களுடன் கை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. குழந்தை தூங்கினாலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த விரல்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறது.
இதன்மூலம் குழந்தை மட்டுமின்றி தாங்களும் நிம்மதியாக உறங்குவதாக அவர் பேசிய காணொலியை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த காணொலி சுமார் 9 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
