ஓமலூர், நவ. 14- ஓமலூர் சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் கழக மாவட்டக் காப்பாளர் ஆசிரியர் க கிருட்டிணமூர்த்தி 31-10-2025 அன்று இயற்கை எய்தினார்.
செய்தியறிந்த தமிழர் தலைவர் அவர்கள் அவரது வாழ்விணையர். கி ராஜேஸ்வரி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
அவரது நினைவைப் போற்றும் விதமாக நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 11-11-2025 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இவ் நினைவேந்தல் கூட்டத்தை கழகக் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் தலைமையேற்று நடத்தினார்.
சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் க கிருட்டிணமூர்த்தியின் படத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க சண்முகம் திறந்து வைத்தார்
அவரது வாழ்நாள் மருத்துவர் இரா.சரவணன் நிகழ்விற்கு முன்னிலை வைத்து உரையாற்றினார்.
ஆசிரியர் க.கிருட்டிணமூர்த்தி அவர்களின் படத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க சண்முகம் படத்தினை திறந்து வைத்தார்
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார்,தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிகளின் தலைமையில் அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய தோழர்கள் சிந்தாமணியூர் கவிஞர் சி சுப்ரமணியன், ஓமலூர் சவுந்திரராசன் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள்.
மேட்டூர் கழக மாவட்டத் தலைவர் கா.நா.பாலு, கொளத்தூர் மணி, க.ச.ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், க கிருட்டிணமூர்த்தி அவர்களின் தன்னலமற்றத் தொண்டு, தமிழர் தலைவர் மீது வைத்திருந்த உறுதியான, மாறாப் பற்று ஆகியவற்றை விளக்கியும் அவரது இயக்க செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.
இவ் நிகழ்வில் கழக காப்பாளர் சேலம் கி.ஜவகர், கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மாநில மகளிரணிச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மேட்டூர் மாவட்ட செயலாளர் ப கலைவாணன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜு, செயலாளர் சேலம் சரவணன், ஆத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சேகர்,ஆத்தூர் நகர தலைவர் அண்ணாதுரை, கழக காப்பாளர்கள் வானவில், விடுதலை சந்திரன் மற்றும் மேட்டூர், சேலம், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட கழக தோழர்கள் தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அவருக்கு இறுதிவரை உதவியாளராக இருந்த தோழர் கணபதிக்கு கழக சார்பாக காப்பாளர் பழநி புள்ளையண்ணன் பயனாடை அணிவித்தார். இறுதியாக க.கிருஷ்ணமூர்த்தியின் தம்பி க சக்திவேல் நன்றி உரையாற்றினார்.
குறிப்பு: ஒரு வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை அவரது குடும்பத்தினர் அனைவரும் கருப்பு உடை அணிந்திருந்தது அவரது கொள்கை வெற்றியை பறைசாற்றியது.
அவரது வாழ்விணையர் கி ராஜேஸ்வரி, மக்கட்செல்வங்கள் கண்மணி சுரேஷ், அன்புச்செல்வி செந்தில், தம்பி லோகநாதன், தம்பி மகன்கள் அன்பு செல்வன், அறிவுசெல்வன், அறிவானந்து, தம்பிமகள் கனிமொழிசெந்தில்குமார் ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வந்துதிருந்த அனைவருக்கும் புலால்உணவு வழங்கினார்கள்
