பெங்களூரு, நவ. 14- பெங்களூரு வில் தேசிய உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மய்யம் உள்ளது. இங்கு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள், ரோகிணி நீல்கேணி மூளை மற்றும் மனநிலை மய்ய விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
மரபணு குறைபாடு
இதில் மனித மூளையில் உள்ள ஒரு வகையான கொழுப்பு இயல்பை விட அதிகமாக இருந்தால் நோயாளி களிடம் மரபணு சார்ந்த நோயை உண்டாக்குவதை கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு ‘லோவ் சிண்ட் ராம்’ (மரபணு குறைபாடு) என்று பெயர். இந்த வகை மரபணு குறை பாடு பிறவியிலேயே கண், மூளை, சிறுநீரகங்களை பாதிக்கும். உலகில் இந்த மரபணு குறைபாடு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு தென்படுகிறது. இந்த பாதிப்பு இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து தேசிய உயிரியல் அறிவியல் மய்யத்தில் பி.எச்.டி. படித்து வரும் யோஜத் சர்மா கூறுகையில், “மூளையில் உள்ள நரம்புக்கும், செல்களுக்கும் இடையே மென்மையான தகவல் தொடர்பு விசயத்தில் இந்த அதிகமாக காணப்படும் கொழுப்பு தலையிடுகிறது. அது மூளையில் இருக்கும் நரம்பு செல்களை பாதிக்கிறது. இது இன்னொருவகை மூளை செல் ஆகும். இந்த சமமற்ற நிலை மூளையின் இயல்பான வளர்ச் சியை தடுக்கிறது” என்றார்.
இந்த நோயை குணப்படுத்துவ தற்கான மருந்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
