ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் – மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்காக நாட்டையும் மனித சமூகத்தையும் பிரிவினையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக் கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிகக் குறைந்த விலைக்கும் எதையும் காட்டிக் கொடுப்பார்கள்.
(குடிஅரசு 10.9.1949)