ஜான்சி, நவ.13 ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் என்ற வாலிபர் ஓடும் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. காணொலியை பார்த்த பலரும் வாலிபரின் செயலை விமர் சித்து பதிவிட்டனர். இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வாலி பர் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் சிறீவாஸ் என்பதும் அவர் சமூக வலை தளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குளித்து ரீல் காட்சிப் பதிவு எடுத்து பதிவிட்டதும் ெதரிய வந்தது. இதையடுத்து அவரை ரயில்வே காவல் துறையினர் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
