அய்யம்பேட்டை, நவ.13 நேற்று (12.11.2025) முற்பகல் 11 மணிய ளவில் அய்யம்பேட்டை செ.சிந்த னைச்செல்வியின் தந்தையாரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியின் வாழ்விணையரும், ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆய்வாளருமான பெரியார் கொள்கைப் பற்றாளர் த.செல்வமணி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி அய்யம்பேட்டை நேரு நகர் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது
தஞ்சை பள்ளி அக்ரகார கழக பகுதி செயலாளர் பேராசிரியர் க.ஜோதிபாசு அனைவரையும் வரவேற்றார்
குடந்தை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி நிகழ்விற்கு தலைமையேற்று நினைவு உரையாற்றினார்.
குடந்தை மாவட்ட கழக செயலாளர் உள்ளிக்கடை சு.ம.துரைராசு, பாபநாசம் ஒன்றிய கழகத் தலைவர் ராஜகிரி தங்க.பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, குடந்தை மாவட்ட துணைத் தலைவர் அய்யம்பேட்டை வ.அழகுவேல், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திருஞானசம்பந்தம், குடந்தை மாவட்ட கழக துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை ஏற்று இரங்கல் உரை யாற்றினர்.
தஞ்சை மாநகர கழகத் தலை வர் செ.தமிழ்ச்செல்வன் இணைப்பு ரையாற்றினார்
ஓய்வு ஊதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்புராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நினைவு உரை ஆற்றினர்.
நினைவேந்தல் உரை
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பெரியார் கொள்கை பற்றாளர் ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆய்வாளர் மறைந்த த.செல்வமணி அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மறைந்தும் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள செல்வமணி அவர்கள் காவல்துறையில் பணியாற்றினாலும் தந்தை பெரியார் கொள்கைகளை வாழ்வியலாக ஏற்று வாழ்க்கையில் எளிமையைக் கடைபிடித்து தன்னுடைய மகள் சிந்தனைச்செல்வியை நிர்வாக மேலாண்மை (MBA) படிக்க வைத்து, இயலாதவர்களுக்கு பல உதவிகளை செய்து மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.
அவர் எந்தக் கொள்கையை தன் வாழ்நாளில் பின்பற்றி வாழ்ந்தாரோ அந்த பெரியார் கொள்கைப்படி அவருடைய இறப்பு நிகழ்விலும் எந்தவித மதச் சடங்குகள், மூடநம்பிக்கைகள் இல்லாத நிகழ்வாக அவருடைய குடும்பத்தினர் நடத்தியது சிறப்புகுரியது.
இந்தப் படத்திறப்பு நிகழ்வையும் அவர் விரும்பியபடியே எந்தவிதச் சடங்குகள் இல்லாமல் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்து நடத்துவது தான் அவருக்கு உண்மையான வீர வணக்கம் செலுத்துவதாகும். அந்த வகையில் இந்தக் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
கழகத் தோழர்கள்
துணை நிற்பார்கள்!
செல்வமணி மறைந்திருந்தாலும், அவர் பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்று சிறப்பாக வாழ்ந்தி ருக்கிறார் அவரது மகள் சிந்தனைச் செல்வியும், செல்வமணி அவர்களின் வாழ்விணையர் கலைச்செல்விக்கும் திராவிடர் கழகத் தோழர்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள்.
பெரியார் கொள்கை என்பது வாழ்வி யல் நெறி. இந்தக் கொள்கைப்படி வாழ்ந்து மறைந்த செல்வமணி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் இரங்கலை தெரிவித்து தனது இரங்கல் உரையை நிறைவு செய்தார் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்
மறைந்த செல்வமணி அவர்களின் வாழ்விணையர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர்
தஞ்சை மாவட்ட துணைத் தலை வர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் லெனின் பாஸ்கர், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி கழக செயலாளர் வெ.துரை, புண்ணிய நல்லூர் ராஜராஜ, ஓய்வு பெற்ற நீதிபதி நவமூர்த்தி, சகோதரர் த.பாண்டியன், உள்ளிட்ட உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
படத்திறப்பு நிகழ்வு அந்தப் பகுதி மக்களிடையே பெரியார் கொள்கைப் பிரச்சார நிகழ்வாக அமைந்தது.
