புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில்
புதுச்சேரி, நவ. 12– புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை” முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 9/11/2025 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ. நடராசன் தலைமையேற்க, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா. குமரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் தொடக்கவுரை நிகழ்த்த, பின்னர் பேச்சுப்போட்டி தொடங்கியது.
தலைமைக் கழகம் அறிவித்த தலைப்புகளை ஒட்டி மாணவ, மாணவியர் தங்களின் உரையை நிகழ்த்தினார்கள்.
ந.மு. தமிழ்மணி, புதுவைப் பிரபா மற்றும் வி.இளவரசி சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியைச் சிறப்பாக நடத்தினார்கள்.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசை (ரூ 5000/-) இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் கு.தொல்காப்பியனும்,
இரண்டாம் பரிசை (ரூ 3000/-) மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவி வே.தி. ரித்திகாவும்,
மூன்றாம் பரிசை (ரூ 2000/-) அதாயி இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவி மு.ரில்வானாவும் பெற்றார் கள்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நினைவுப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் திரா விடர் கழகக் காப்பாளர்கள் இரா. சடகோபன் மற்றும் இர. இராசு ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
மாவட்டத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழகச் செயலாளர் சபீர் முகமது, அரசு ஊழியர் அய்க்கியப் பேரவைத் தலைவர் மணித் கோவிந்த ராஜ், அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதல்வர் அ.ச. முகமது ஆசீம் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர் சார்பில் இராமச்சந்திரா உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் இரா.சங்கீதா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இளைஞரணித் தலைவர் பி.அறிவுச்செல்வன், திராவிட மாணவர் கழகத் தலைவர் ச.சித் தார்த், புதுச்சேரி நகராட்சிப் பொறுப்பாளர்கள் எஸ்.கிருஷ்ண சாமி, மு.ஆறுமுகம், இரா.திரு நாவுக்கரசு, ஊடகவியளாளர் பெ.ஆதிநாராயணன், ராஜகுமாரி, வி.சந்திரவதனன், க.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ. சிவராசன் நன்றி கூறினார்.
