
திருவனந்தபுரம், நவ.12 கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவர் மற்றும் ‘டீன்’ டாக்டர் சி.என்.விஜயகுமாரி, ‘‘பறையன், புலை யன் எல்லாம் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட சமஸ்கிருதம் பார்ப்ப னர்களைப் போல் கற்றுக்கொள்ள முடியாது என்றும், ‘‘பறையன், புலையன் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வந்ததால் தான், சமஸ்கிருதத்தின் ‘புனித’மே அசுத்த மாகிவிட்டது’’ என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முனைவர் பட்ட ஆய்வா ளர் விபின் விஜயன், ‘டீன்’ விஜயகுமாரி மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வரு மாறு:
தீவிரமான ஜாதியப் பாகுபாடு மற்றும் அதிகார ‘துஷ்பிரயோகக்’ குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளார். மேலும் தனக்கு முழுமையானத் தகுதி இருந்தும் தனது முனைவர் பட்டத்தை வழங்குவதற்கு ‘டீன்’ விஜயகுமாரி மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி ஆய்வாளர் விபின் விஜயன், தனது முனைவர் பட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. அரசியல் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ‘டீனின்’ ஜாதியப் பாரபட்சமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிய ரீதியிலான அவதூறுகள்
விபின் விஜயன் தனது சமூக வலை தளப் பதிவில், ‘டீன்’ விஜயகுமாரி, ‘‘ஒரு புலையன் அல்லது பறையன் எவ்வளவு திறமையாகப் படித்தாலும், பார்ப்பனர்களுக்கு இணையாக சமஸ்கிருத்தைப் படிக்கவே முடியாது. அப்படியே படித்தாலும் அவர்களைப் பார்ப்பனர்களுக்கு இணையாக யாருமே மதிக்கமாட்டார்கள்’’ என்பது போன்ற கடுமையான ஜாதிய ரீதியிலான கருத்துகளைக் கூறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் முனைவர் பட்டம் முடித்த தன்னை, ‘‘சமஸ்கிருதம் தெரியாத மண்’’ என்று இழிவுபடுத்தியதாகவும் கூறி யுள்ளார்.
‘‘இந்தப் பழி என் மீது அழியாத கறை போல குத்தப்பட்டுள்ளது. இது எனக்கு ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது’’ என்று விபின் விஜயன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முதுகலைப் பட்டம் வழங்கியவர், முனைவர் பட்டத்தை மறுப்பது ஏன்?
சமஸ்கிருதத் துறையில் ‘டீன்’ விஜயகுமாரியின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக எம்.ஃபில் பட்டம் பெற்றவர் விபின் விஜயன்.
‘‘எனக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றால், அவர் எதன் அடிப்படையில் எனக்கு வழிகாட்டி எனது எம்.ஃபில் பட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்? நான் ஒரு மண் என்றால், எனக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்த ‘டீன்’ என்ன சந்தனமா? அல்லது நான் எம்ஃபில் முடித்த பிறகு சமஸ்கிருதத்தை மறந்துவிட்டேனா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள விபின் விஜயன், இந்த நிலை ஜாதியப் பாரபட்சத்தில் தான் வேரூன்றி உள்ளது என்று குற்றம் சாட்டி யுள்ளார்.
நிபுணர்கள் ஒப்புதல் அளித்தும் ‘டீன்’ எதிர்ப்பு
பல்கலைக்கழக விதிகளின்படி, விபின் விஜயனின் முனைவர் ஆய்வுக் கட்டுரை, ‘சத்குருசர்வசம்: ஓர் ஆய்வு’ (‘Sadgurusarvasam: A Study’) அலகாபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அனில் பிரதாப் கிரி மற்றும் சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.பத்மநாபம் உட்பட துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட இரண்டு நிபுணர்களாலும் நேர்மறையாக மதிப்பிடப்பட்டு, பட்டம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ‘டீன்’ விஜயகுமாரி தனது முனைவர் பட்டத்தில் கையெ ழுத்திட மறுத்துவிட்டதாகவும், விபின் ‘‘சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தை கூட பேசத் தகுதியற்றவர்’’ என்று கூறிய தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
‘‘பறையனும் புலையனும் படிக்க வந்ததால் சமஸ்கிருத துறை அசுத்த மாகிவிட்டது, அதை மீண்டும் சுத்திகரிக்க வேண்டும்’’ என்று டீன் இழிவான கருத்துகளைத் தெரிவித்ததாகவும் விஜயன் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை மற்றும் பதவிலிருந்து நீக்க கோரிக்கை!
விபின் விஜயன், ‘‘நான் மிகபெரிய அளவில் அவமானப்பட்டுவிட்டேன். ‘டீனின்’ ஜாதியப் பாரபட்சமும், அதிகார ‘துஷ்பிரயோகமும்’ பொதுவெளியில் பேசப்படவேண்டும்’’ என்று கூறி, டாக்டர் விஜயகுமாரியை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தனது ஆய்வுக் கட்டுரையின் பல்வேறு கருத்துகள் டீனுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அது பொதுவெளியில் வந்தது குறித்தும் கேள்வி எழுப்பி, எனது ஆய்வுக்கட்டுரைகளின் முக்கிய குறிப்புகளை பொதுவெளியில் கசிய விட்டு தன்னை காப்பியடித்து எழுதியது போல் காட்டி தனது கல்வித் தகுதியைக் கெடுக்கும் முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது முனைவர் பட்டம் தாமத மானதால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்துள்ள விபின் விஜயன், சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் விசாரணை நடத்த கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருப்பது குறிப்பி டத்தக்கது.
