தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.அய்.ஆர். பணியில் பா.ஜ.க. தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம் செல்வப்பெருந்தகை கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 12– தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்அய்ஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமைச் சட்டம் -1955இன்கீழ் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. உள்ளுர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு குடியுரிமை குறித்து முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் மக்களின் குடியுரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல் தேர்தல் ஆணையம் இத்தகைய நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தான். எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பாஜக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பாஜக பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *