வல்லம், நவ. 8- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மற்றும் திருச்சி அறம் மருத்துவமனை இணைந்து சிறப்பு குழந்தை களின் பெற்றோர்களுக்கான மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி டால்பின் சிறப்புப் பள்ளியில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக் கழக இரண்டாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி செல்வி.சஹானா, வரவேற் புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அறம் மருத்துவ மனையின் மனநல ஆலோசகர் சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் சிறப்பு குழந்தை களின் பெற்றோர்கள் தங்களு டைய மனநலத்தில் அதீத அக் கறை எடுத்துக்கொண்டால் தான் குழந்தை வளர்ப்பின் முழுபயனையும் அடைய முடியும் என்னும் கருத்தை கதைகளின் மூலம் விளக்கினார். மேலும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கக்கூடிய சிலசுய பாதுகாப்பு வழிமுறைகளையும் கற்பித்தார். பெற்றோர்களுக்கு பிராணயாமம் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைய டுத்து டால்பின் சிறப்புப் பள்ளி இயக்குநர் திருமதி ரவீனாகார் மல் கருத்துரை வழங்கினார்.
அவர் தம் உரையில் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒருவித சிக்கல்கள் இருக்கும் அதனை விருப்பமுடன் ஏற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் கருத்தை உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்தார்.
இறுதியாக இரண்டாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி, செல்வி. கவிநிலவு நன் றியுரை வழங்கினார். இந்நிகழ் வில் சுமார் 60 -க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.