டில்லியில் மூச்சுத் திணறல்! காற்று மாசுபாடு அதிகரிப்பு

புதுடில்லி, நவ.11  டில்லியில் காற்று மாசுபாடு மோசம் அடைந்துள்ள நிலை யில் 6 அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங் கள் 24 மணி நேரத்தில் 60 சதவிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காற்று மாசுபாடு

டில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது.

இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிரீம்ஸ் (CREAMS) ஆய்வகம் சேகரித்த தரவுகளின்படி, நவம்பர் 8ஆம் தேதி வெறும் 24 மணி நேரத்தில், 6 மாநிலங் களில் பயிர்க் கழிவு எரிப்பு சம் பலங்கள் 60 சதவீதம் அதிகரித் துள்ளதாக தெரியவந்துள்ளது.

செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் தரவுகளின்படி, பஞ் சாப், அரியானா, உபி, டில்லி, ராஜஸ்தான், ம.பி. ஆகிய 6 மாநிலங்களில் நவம்பர் 7ஆம் தேதி 568ஆக இருந்த பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் மறு நான் 911ஆக அதிகரித்துள்ளது.

நவம்பர் 8ஆம் தேதி, ம.பி. யில் 353 இடங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பஞ்சாபில் 238, அரியானாவில் 158, ராஜஸ் தானில் 120. உபி.யில் 42 என இந்த சம்பவங்கள் பதிவாகியுள் ளன. இந்தப் பருவத்தில் செப் டம்பர் 15 முதல் நவம்பர் 8 வரை மேற்கண்ட 6 மாநிலங்களில் மொத்தம் 8,365 பயிர்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பஞ்சாபில் அதிகபட்சமாக 3,622 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பயிர்க் கழிவுகள் எரிக்கப் படுவதை தடுக்க சில விவ சாயிகளை பிடித்து சிறையில் அடைக்கலாம் என்றும் ஒரு முறை உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

டில்லியில் காற்று மாசு பாடு அதிகரிப்பதால் மக் களுக்கு கண் எரிச்சல், சுவாசிப் பதில் சிரமம் உள்ளிட்ட சுகா தார பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் டில்லியில் நேற்று காலை காற்று தரக்குறி யீடு (ஏகியூஅய்) 391 என்ற மிக மோசமான நிலையில் இருந் தது. காற்று தரக்குறியீடு 350அய் கடந்தால் 3ஆம் நிலை கிராப் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலை யில் இதுவரை டில்லி அரசு இதனை அமல் படுத்தாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *