உரத்தநாடு, நவ. 11- 7.11,2025 அன்று உரத்தநாடு வருகை தந்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி தலைமையில் உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், நகர தலைவர் பேபி.இரவிச்சந்திரன், நகர செயலாளர் பு.செந்தில்குமார் முன்னிலையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோ.இராமமூர்த்தி ஆகியோர் ஒரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் முன்பு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் விடுதலை வாசகர் சாமி.மனோகரன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு பழங்கள் வழங்கினர்.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு வரவேற்பு
Leave a Comment
