பீகாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பீகாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
