கடலூர், நவ.10 கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் உலகம் நிதியாக ரூ.20 லட்சத்துக்கும் குறையாமல் வழங்குவது என்றும், டிசம்பர் 9 ஆம் தேதி தமிழர் தலைவரின் பரப்புரை பயண நிகழ்ச்சியை, மாநாடு போல் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவரம் வருமாறு:
கடலூர் மாவட்டக் கழக கலந்து ரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் கடந்த 6.11.2025 அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்டக் கழக தலைவர்சொ .தண்டபாணி கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார். வடலூர் நகர கழக தலைவர் புலவர் ராவணன் செயலாளர் குணசேகரன் மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், இந்திரா நகர் கிளைக் கழகத் தலைவர் தங்க பாஸ்கர், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், சுமலதா, திராவிட மணி, முனியம்மாள், உதயசங்கர், திருநாவுக்கரசு, எழுத்தாளர் அசோக், கனகராஜ், சிவபாண்டியன், வா. சேகர், மாவட்ட இளைஞரணி செய லாளர் ராமநாதன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கழகப் பொதுச் செயலாளர் தமது தலைமை உரையில், பெரியார் உலகம் நிதி திரட்டுதல் மற்றும் டிசம்பர் 9 தமிழர் தலைவரின் பரப்புரைக் கூட்டத்தை நெய்வேலி ஆர்ச் கேட்டில், மாநாடு போல் நடத்துவது பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
‘பெரியார் உலக’ நிதியாக ரூ.20 லட்சத்துக்கும் குறையாமல் வழங்கு வது என்றும், டிசம்பர் 9 ஆம் தேதி தமிழர் தலைவரின் பரப்புரை பயண நிகழ்ச்சியை, மாநாடு போல் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிறைவாக ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.
