அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள் – நவம்பர் 14க்குள் விண்ணப்பிக்கலாம்

3 Min Read

சென்னை, நவ. 10- அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஓர் ஆண்டு காலத்திற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் நேரடி சேர்க்கை மூலம் நிரப்படும் நிலையில், இதுவரை நிரப்பப்படாமல் உள்ள 1,149 சான்றிதழ் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா், நவம்பா் 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் படிப்பு

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,2025-2026 கல்வியாண்டில் நிரப்பப்படாத மருத்துவம் சாா்ந்த காலி இடங்களில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, அனஸ்தீசியா டெக்னீஷியன், தியேட்டா் டெக்னீஷியன், அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநா், டயாலிசிஸ் டெக்னீஷியன், எலும்பியல் தொழில்நுட்ப நிபுணா், ஈசிஜி மற்றும் டிரெட்மில் டெக்னீஷியன், சுவாச சிகிச்சை தொழில்நுட்ப நிபுணா் போன்ற பாடப் பிரிவுகளில் சேரலாம்.இத்துடன், காா்டியோ சோனாகிராபி டெக்னீஷியன், இதய வடிகுழாய் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், இசிஜி மற்றும் இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநா், மனநல ஆதரவு பணியாளா், மருத்துவப் பதிவு தொழில்நுட்ப வல்லுநா், வீட்டு சுகாதார பராமரிப்பாளா், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் உள்பட மொத்தம் 14 வகையான சான்றிதழ் படிப்புகளில் உள்ள காலி இடங்களில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 254, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 393, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 319, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் 48, கலைஞா் மருத்துவக் கல்லூரியில் 135 என மொத்தம் 1,149 காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா் 2025 டிசம்பா் 31 ஆம் தேதியன்று 17 வயதை நிறைவு பெற்றவராகவும், 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பாடப்பிரிவுக்கு மட்டும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாடப் பிரிவுகளில் சேருவோருக்கு விதிகளுக்கு உட்பட்டு புதுமைப்பெண் திட்டம் மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள், தாங்கள் சேர விரும்பும் மருத்துவக் கல்லூரிகளின் துணை முதல்வா்களை வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பா் 14) நேரில் அணுகி சான்றிதழ் படிப்பில் சோ்ந்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விதிமுறைகளை மீறி ஆண்கள்
‘பிங்க் ஆட்டோ’ ஓட்டினால் பறிமுதல்

ஆட்சியர் எச்சரிக்கை!

சென்னை, நவ. 10- மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதி மற்றும் பெண்களுக்குத் தனியாகத் தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசால் மானியத்துடன் தொடங்கப்பட்டதே இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்டம் ஆகும்.

தமிழ்நாடு

ஆண்கள் ஓட்டக் கூடாது

இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி, இந்த பிங்க் ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் விதிகள் தெளிவாக இருந்தபோதிலும், இந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவதாகச் சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறைகளை மீறி ஆண்கள் பிங்க் ஆட்டோக்களை இயக்கினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

ஏற்கெனவே, பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தின் நோக்கத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் இந்த எச்சரிக்கை, பிங்க் ஆட்டோ திட்டத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதோடு, பெண்களுக்கான பிரத்யேகத் திட்டங்களின் பலன்கள் அவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *