உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் டேராடூனில் வாக்காளராக இருந்துகொண்டே பீகாரிலும் வாக்க ளித்துள்ளார். அவரே வெளியிட்ட பதிவின் மூலம் இந்த உண்மை வெளி யானது
பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநிலத் தலைவர் பிரபாத் குமார் பீகாரில் தான் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியதை பெருமை பட சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் இவருக்கு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் முகவரியில் ஒரு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதை வைத்து அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
மிகப்பெரிய முரண்பாடு
இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு நபர், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளிலோ அல்லது மாநிலங்க ளிலோ வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும்.
தேர்தல் ஆணையத்தின் தரவுத்தளங்கள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு வாக்காளரின் தனிப்பட்ட அடை யாளத்தைப் பயன்படுத்தி (உதாரணமாக, ஆதார் எண் இணைப்பு அல்லது ஒரே ஒளிப்படம்) இரட்டைப் பதிவுகளைக் கண்டறிய வேண்டும்.
முறையான பரிசோதனையை ஏன் செய்யவில்லை?
டேராடூனில் செயல்படும் வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கும்போதே, அதே நபர் பீகாரில் புதிய எண்ணைப் பெற முடிந்தால், புதிய பதிவு செய்யும் போது தேர்தல் பதிவு அதிகாரி முறையான பரிசோதனையை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
எஸ்.டி. இண்டர் கல்லூரி, ரேஸ்கோர்ஸ் சாலை என்ற முகவரியில் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இன்னும் செயலில் இருக்கும் நிலையில், அவர் பீகாரில் வாக்களிக்க எஸ்.அய்.ஆர். மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றிருப்பது தேர்தல் ஆணையமே முன்வந்து செய்த மோசடியாகவே கருத்தப்படும்.
