விருதுநகர் மாவட்ட மேனாள் கழகத் தலைவரும், திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும். மாணவர் பருவந்தொட்டு கழகத்தில் ஈடுபட்டு (இளைஞரணி தலைவர்) பணியாற்றி வந்தவரும். உழைப்பால் உயர்ந்த (அச்சகத் தொழில்) பெருமகனாருமான வானவில் மானமிகு மணி (வயது 71) அவர்கள் சிவகாசியில் இன்று (9.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க பெரிதும் வருந்துகிறோம்.
சிறிது காலமாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மறைவுற்றார். அவர் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; இயக்கத்திற்கே பெரும் இழப்பாகும்.
அவர் தம் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்விணையர் வெற்றிச் செல்வி, மகள் கயல்விழி, மகன் பொறி யாளர் கதிரவன் ஆகியோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும். கழகத்தினருக்கும். நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு இல.திருப்பதி கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்.
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: சிவகாசியில் சில மணி நேரம் உடல் வைக்கப்பட்டு அதற்குப் பின் வானவில் மணியின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தொடர்புக்கு: 9244228878 (மகன் கதிரவன்)
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை எடிசன்ராஜா, காரைக்குடி திராவிடமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை செல்வம் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
வானவில் மணியின் மகன் பொறியாளர் கதிர வனிடம் கைப்பேசி வழியாகக் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆறுதல் தெரிவித்தார்.
