8.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மராத்தா இனத்தவர்க்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டிற்கு பலத்த எதிர்ப்பு. அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் அரசிற்கு எதிராக போர்க்கொடி.
* எஸ்சி, எஸ்டி-க்கு 22% பீகாரில் ஓபிசி-க்கு 65% இடஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு.
* அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள், “இந்தியா” கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என காங்கிரஸ் நம்பிக்கை.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஸநாதான ஒழிப்பு மாநாட்டில் தான் கலந்து கொண்டது ஜாதி ஒழிப்புக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தான் என அமைச்சர் சேகர் பாபு நீதிமன்றத்தில் பதில்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்வதற்காக கொலீஜியம் பரிந்துரைத்தவர்களின் பெயர் களை தங்கள் விருப்பம் போல் அரசு தேர்ந்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இந்தியா எப்போதும் ஹிந்து ராஷ்டிராவாகவே இருந்து வருகிறது’ என்கிறார் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஹோசபாலே
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் 3இல் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ் கிறார்கள். பீகாரில் 34% குடும்பங்கள் தினசரி வருமானம் ரூ.200 என அம்மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்.
– குடந்தை கருணா