2025 நவம்பர் 26 – கீழ வாளாடியில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நினைவுநாள் – வீரவணக்க மாநாடு

4 Min Read

ஆணவப் படுகொலைக்கெதிரான சட்டம்: ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா-பெருந்திரளாகத் திரள்வோம்
லால்குடி, திருச்சி, கரூர், துறையூர், பெரம்பலூர், அரியலூர் தஞ்சாவூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

லால்குடி, நவ. 9– 3.11.2025 திங்கள் மாலை 5.30 மணி யளவில் இலால்குடி பெரியார் திருமண மாளிகையில். இலால் குடி, திருச்சி, துறையூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், விருத்தாச்சலம், ஆகிய எட்டு மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலை மையேற்று கருத்துரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் வீ.அன்புராஜா, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, கடவுள் மறுப்பு கூறினார்.

மாநில தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந் தனைச்செல்வன்,  திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், லால்குடி மாவட்டக் காப்பாளர் பா. ஆல்பர்ட், துறையூர் மாவட்டத் தலைவர் சா.மணிவண்ணன், லால்குடி மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, கரூர் மாவட்டத் தலைவர் பி.குமாரசாமி, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி. தங்க ராசு, தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, திருச்சி மாவட்டச் செயலாளர் க.மகாமணி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மு.விஜயேந்திரன், அரியலூர் மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், லால்குடி மாவட்டத் துணைத் தலைவர் க.ஆசைதம்பி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட ப.க துணைச் செயலாளர் அ.செல்வி, புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு, லால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி, ஒன்றியச் செயலாளர் ம.மணி வாசகம், மணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பொ. பெரியசாமி, நகரச் செயலாளர் க.பாச்சந்திரன், இலால்குடி மாவட்ட இளைஞரணித் தலை வர் இசைவாணன், மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் வான்முடி வள்ளல், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சண்முகவேல், மாவட்ட காப்பாளர் அக்ரி.ஆறுமுகம், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

நகரச் செயலாளர் சி.பொற் செழியன், ஒன்றிய அமைப்பாளர் சா.பன்னீர் செல்வம், தர்மராஜ், தொழிலாளரணி மாவட்டச் செயலாளர் அசோகன், மேலவா ளாடி ஒன்றியத் தலைவர் ஜி.கோபிராஜ், ஒன்றியத் துணைத் தலைவர் தா.சுரேஸ்,  திருமங்கலம் கிளைத் தலைவர் வி.மருதை, கிளைச் செயலாளர் பி.பரமசிவம், மணக்கால் கிளைத்தலைவர் வே.ராஜா சம்பத், கிளைத் செயலாளர் பி.பிரபாகரன், சின்னசாமி, வர்ஷினி, அலங்காநல்லூர் கிளைத் தலைவர் ஏ. தனபால், செயலாளர் ஆரோக்கியசாமி, திருச்சி மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சங்கிலி முத்து, மணப்பாறை ஒன்றியத் தலைவர் ரெ.பாலமுருகன், ஒன்றியத் செயலாளர் வீ. அசோக், கிளைத் தலைவர் மா.தமிழ் முத்து, ஜெய. ரீத்தா மேரி, அலங்காரை கிளைத் தலைவர் எஸ்.மனோகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கா.சிவசங்கரன், மு பரமசிவம், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன், மீன்சுருட்டி ரா.திலீபன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சிவக்கொழுந்து, பெரம்பலூர் இளைஞரணி மாவட்டத் தலைவர் செ.தமிழரசன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.சின்னசாமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இலால்குடி மாவட்டத் துணை செயலாளர் வே.சித்தார்த் தன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஜாதி ஒழிப்பிற்காக அரசியல் சட்ட எரிப்பு போராட்ட 69 வது நினைவு வீரவணக்க நாள் மாநாட்டை இலால்குடியில் நவம்பர் 26 அன்று காலையில் ஜாதி ஒழிப்பு கருத்தரங்கம், மாலையில் ஜாதி ஒழிப்பு பேரணி, கீழவாளாடியில் திறந்த வெளி மாநாட்டை மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும்.

மாநாட்டிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பளித்து.

மாநாட்டிற்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் கழகத் தோழர்களை குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப் பிக்க வைப்பது என முடிவு செய் யப்பட்டுள்ளது.

ஜாதி ஆணவ படுகொலை தடுப்புக்கு ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

நவம்பர் 26 அன்று லால் குடியில் நடைபெறும் ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள் மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மாநாட்டை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

நவம்பர் 26 லால்குடியில் நடைபெறும் ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள் மாநாட்டில். டிசம்பர் 02இல் 93ஆவது பிறந்தநாள் காணும் தமிழ தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம், 93 அய்நூறு ரூபாய் நோட்டு மாலை, வெள்ளியிலான வீரவாள், மற்றும் பெரியார் உலகத்திற்கு 1,00,000 ரூபாய் வழங்கி சிறப்பிக்கும் லால்குடி மாவட்ட தலைவர் கொடையாளர் தே.வால்டருக்கு  இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு லால்குடி கழக மாவட்ட சார்பில் நிதி திரட்டி  நவம்பர்-26 அன்று நடைபெறும் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் டோல் பிளாசா அருகே சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலையில் நீண்ட  நாட்களாக சட்டத்தை மீறும் வகையில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர நுழைவாயில் வைக் கப்பட்டுள்ளது. உடனடியாக அகற்றிட சமயபுரம் நகர டவுன் காவல்துறையை  மற்றும் உள்ளாட்சி நிருவாகத்தை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *