சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளம் பெண் ஒருவர் தெரிவித்த கருத்துகள் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதா? என்பதற்கு விடை தேடும் பதிலாக அமைய பெற்றுள்ளது.
தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதிக்காக செயல்பட்டதையும் கேள்விப்பட்டதையும் வைத்து அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள அவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம் என்று இங்கு வந்தேன். ‘பெண் ஏன் அடிமையானாள்?’, பெரியார் அய்டியாலஜி என்ற அவருடைய இரண்டு புத்தகங்களை வாங்கி உள்ளேன்.
பெண் அடிமைத்தனத்தை ஒழிப்பதும், ஜாதிய மறுப்பு திருமணத்தை ஆதரிப்பதும் பெரியார் முக்கியமாக கருதுகின்றார். பெண்களுக்கான சுதந்திரம் எப்படி இருக்கிறது என்றால் அது ஒரு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டுள்ளது. முழுமையாக கட்டு போடப்படாவிட்டாலும் சங்கிலியின் நீளம் குறைந்த அளவு மட்டுமல்ல அது ஆண்களின் கைகளில் உள்ளது.
இந்த சங்கிலி இணைப்பை வைத்து கொண்டு நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஜாதி ஒழிப்பும், பெண்கள் சுதந்திரமும் நடக்க வேண்டும் என்றால் பெரியார் இன்னும் தேவை என்று அவர் கூறிய முழுமையான கருத்துகளை Periyar Vision OTT-இல் இன்றே பாருங்கள். நன்றி வணக்கம்.
– S.மகேஸ்வரி, சிதம்பரம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

