சென்னை, நவ. 8- போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன. 2ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராக நவ.11இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பெருமளவில் பங்கேற்கும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருளுக்கு எதிராக ஜன.2ஆம் தேதி திருச்சியில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு மணப்பாறை, திண்டுக்கல் வழியாக ஜன.12ஆம் தேதி மதுரையை அடைந்து எங்களது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை வைகோ நடை பயணம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறார்
Leave a Comment
