கோ.கருணாநிதி
உகாண்டா-இந்திய வேர்களைக் கொண்ட அறிஞர் மஹ்மூத் மம்தானி மற்றும் திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆகியோரின் மகனான சோஹ்ரான் கே. மம்தானி, 2025 நவம்பர் 4 அன்று வரலாறு படைத்தார். அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் ஜனநாயக சமூகவாத மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந் நிகழ்வு, இளைஞர்கள், வாடகையாளர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்க மக்களால் இயக்கப்படும் ஒரு புதிய தலைமுறை, புதிய கருத்தியல் மாற்றத்தின் பிரதிநிதியாகும்.
மம்தானி தன்னை ஒரு ஜனநாயக சமூகவாதி என அடையாளப்படுத்துகிறார். சமத்துவம், செல்வத்தின் மறுவிநியோகம் மற்றும் அடிப்படை சேவைகளின் ஜனநாயக கட்டுப்பாடு என்பவற்றை வலியுறுத்துகிறார்.
மார்டின் லூதர் கிங் ஜூனியரின் “செல்வத்தின் நியாயமான பகிர்வு” என்ற அழைப்பினால் ஊக்க மடைந்த அவர், அரசு சந்தையைப் பராமரிப் பதற்குப் பதிலாக அமைப்புசார் சமத்துவமின்மையைச் சீர்செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவரது கொள்கை தளத்தில் அடித்தள இயக்கங்களும், நிறுவன சீர்திருத்தங்களும் இணைந்துள்ளன — சமூக நீதி மற்றும் பொருளாதார ஜனநாயகம் இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.
(திராவிட இயக்கம் நூறாண்டுகளுக்கு முன்பு ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்ற கோட்பாட்டில் தொடங்கப்பட்ட இயக்கம் என்பதை இங்கே நினைவு கூர்க)
முக்கிய கொள்கைகள்:
- வீட்டு வாடகை மற்றும் வீடமைப்பு: வாடகை உறைபடுத்தல், 2 லட்சம் மலிவான வீடுகள்.
- பொதுப் போக்குவரத்து: பேருந்து இலவசமாக்கல், மெட்ரோ புதுப்பித்தல்.
- வரி சீர்திருத்தம்: பெரு நிறுவனங் கள் மற்றும் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் வரி வசூல் செய்து சமூக நலத் திட்டங்களுக்கு நிதி.
- பொதுப் பாதுகாப்பு: “சமூக பாதுகாப் புத் துறை” உருவாக்கம், மனநலம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்.
- சமூக சமத்துவம்: இளைஞர் வேலை வாய்ப்பு, குடியேறியோர் மற்றும் சிறு பான்மையினருக்கான உரிமைகள்.
மம்தானியின் வெற்றி, அமெரிக்க நகராட்சிக் களத்தில் பன்முகத்தன்மையும், முன்னேற்ற சிந்தனையும் வளர்ந்து வருவ தற்கான அடையாளம் ஆகும்.
அவரது மறுவிநியோகக் கொள்கைகள் நகர நிதியைப் பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்தாலும், ஜனநாயக சமூகவாதம் வழியாக நகராட்சியை நடத்தும் இந்த முயற்சி, 21ஆம் நூற்றாண்டுக்கான சமூக நீதி மற்றும் இணைச் செழிப்பு மாடலாக நியூயார்க் நகரை மாற்றும் வாய்ப்பை உருவாக்குகிறது.
