புனே, நவ.8 மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்குச் சொந்தமான தனி யார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதி களை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசிய லில் புயலைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கி இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராட்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி அரசு நடக்கிறது. துணை முதலமைச்சராக தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் பொறுப்பு வகிக்கிறார்.
விதிகளை மீறி
விற்பனை
இந்தச் சூழலில், அவரது மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு புனே வில் உள்ள, அரசுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் விதிகளை மீறி விற்கப் பட்டுள்ளது. சுமார், 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், வெறும் 300 கோடி ரூபாய்க்கு கைமாறி இருக்கிறது.
கட்டணம் தள்ளுபடி மேலும் இந்த நிலத்தை, வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் பார்த் பவார் எழுதி வாங்கி இருப்பதாகவும், துணை முதலமைச்சரின் மகன் என்பதால் பத்திரப்பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பத்திரப் பதிவு விதிகளின்படி, அரசு நிலங்களை தனியாருக்கு விற்க முடியாது. இந்தச் சூழலில், அரசு நிலம் துணை முதலமைச்சரின் மகனுக்கு விற்கப்பட்டிருப்பதால், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உயர்மட்ட விசாரணை கமிட்டி
இந்த விவகாரம் அம்மாநில அரசிய லில் புயலை கிளப்பி இருக்கும் நிலை யில், துறை ரீதியான விசாரணைக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூடுதல் தலைமை செயலர் விகாஷ் கார்கே தலைமையில் உயர்மட்ட விசாரணை கமிட்டியையும் அமைத்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் புனே துணை பதிவாளர் ரவீந்திர தாரு, தாசில்தார் சூர்யகாந்த் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து பத்திரப் பதிவு துறை அய்.ஜி., ரவீந்திர பின்வாடே கூறியதாவது:
அரசுக்குச் சிக்கல்!
புனேவின் முந்த்வா பகுதியில் அரசுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், ‘அமாதியா என்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உள்ளது.
முத்திரைத்தாள் பதிவு கட்டணம் முழுதாக தள்ளுபடி
பத்திரப்பதிவு இந்நிறுவனத்தில் பார்த் பவாரும் பங்குதாரராக இருக்கி றார். 300 கோடி ரூபாய்க்கு நிலம் விற்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் பதிவு கட்டணம் முழுதாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விதியின்படி, அரசு நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. இந்த சூழலில், அதிகாரிகள் இதற்கு எப்படி சம்மதித்தனர் என தெரியவில்லை. அரசு நிலமாக இருக்கும்பட்சத்தில், பத்திரப்பதிவு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்த் பவார் மட்டுமின்றி, திக்விஜய் பாட்டீல் என்பவரது பெயரிலும் பத்தி ரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.இந்த நில பேரம் முதலமைச்சர் தேவேந் திர பட்ன விஸ் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால், அஜித் பவாரும், அவரது மகனும் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
