1966 நவம்பர் 7 அன்று பசுவதை தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜன சங்கம் போன்ற மதவெறி அமைப்புகள், கல்வி வள்ளல் காமராஜரை கொலை செய்ய கோரத்தாண்டவமாடின. இதில்பல பேர் படுகொலை செய்யப் பட்டனர். காமராஜரின் வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
வரலாற்றின் கொடூர ரணமாய் பதிந்திருக்கும் அந்நாளை நினைவு கூரும் வகையில் 7.11.2025 காலை கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராசரின் உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியதோடு, மதவெறி, கும்பலை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலை மையில் உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது.
குமரிமாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், திமுக ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ் உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
