இலங்கைச் சிறைகளில் நூல்களைப் படிக்கவும், எழுதவும் நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் உழன்ற சிவ ஆரூரன் என்பவர் சிறையில் இருந்தவாவாறே சில புத்தகங்களை எழுதியுள்ளார்.
சிறையிலிருக்கும் போதே 2022-இல் ‘ஆதுரசாலை’ நாவலுக்காக இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறார் என்று எழுத்தாளர் சோபா சக்தி ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறார்.
விடுதலைப் போராட்டத்தை ஒட்டி, ஏராளமான தமிழர்கள் சிறைகளில் இருக்கும் இலங்கையில் இப்படியும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறதே!
– புகழ்மான், பல்லாவரம்
