பிபிசிஅய் மகளிர் அணி தென் ஆப்பிரிக்க அணியோடு விளையாடி உலகக் கோப்பையை வென்றது.
இதனைத்தொடர்ந்து அவர்களை மோடி சந்திக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தார்
ஒரு விளம்பரம் தான்
அதில் வீராங்கனை ஒருவர் கேள்வி கேட்கிறார். அதாவது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்வி அதுமட்டுமே மோடியிடம் கேட்கவேண்டும் என்று பட்டியலிடப்பட்டு கொடுக்கப்படும்
“அதில் ஒன்று நீங்கள் எப்படி இவ்வளவு பளபளப்பாக இருக்கிறீர்கள்? என்ற கேள்வி அதற்கு மோடியின் பதிலோ, 140 கோடி மக்களின் ஆசீர்வாதமும் அவர்களின் அன்பும் தான் எனது பளபளப்பிற்கு காரணம்” என்றார்.
பெண் வீராங்கனைகளில் உழைப்பு மற்றும் அவர்களின் வெற்றி மூலம் இந்தியப் பெண்களுக்கு என்ன சொல்லவருகிறீர்கள் என்பதெல்லாம் மோடிக்கு தேவையில்லாத ஒன்று ஆகும்.
சரி இதே மோடி 2021 ஆம் ஆண்டு இதே கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஜனவரியில், டில்லியில் நடைபெற்ற பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வென்ற குழந்தைகளுடன் உரையாற்றும் நிகழ்வு நடந்தது,
கேள்விக்கு வேறு பதில்!
அப்போது ஒரு மாணவர், இதே கேள்வியைக் கேட்டார். ஒரு வரிகூட மாறாமல் நீங்கள் எப்படி இவ்வளவு பளபளப்பாக இருக்கிறீர்கள்? என்ற கேள்வி அதற்கு பதில் அளித்த மோடிஅதற்கு அவர் அளித்த பதில் நான் கடுமையாக உழைக்கிறேன், அதனால் நிறைய வியர்வை வெளியேறுகிறது. அந்த வியர்வையால் என் முகத்தை மசாஜ் செய்வதால் எனக்குப் பொலிவு கிடைக்கிறது” என்று கூறினார்.
மேலும், குழந்தைகளும் அன்றாடம் குறைந்தது நான்கு முறையாவது வியர்வை வெளியேறும்படி கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்தக் கருத்தின் மூலம் அவர் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். என்று எடுத்துக்கொண்டாலும் குழந்தைகளிடம் இப்படிக் கூறுவது மிகவும் தவறானது காரணம், வியர்வையை முகத்தில் பூசுவதன் மூலம் என்பது.
வியர்வையைப் பூசுவதா?
வியர்வை தோலின் மேல் இருக்கும்போது, அது பாக்டீரியா, சீபம் எனப்படும் உடலே வெளியிடும் எண்ணெய் போன்ற திரவம் மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவற்றுடன் கலக்கிறது. ஆகவே வியர்வையை முகத்தில் தேய்க்கும் போது:
துளைகள் அடைப்பு: வியர்வை, அழுக்கு மற்றும் எண்ணெயுடன் சேர்ந்து, மயிர்க்கால்களின் துளைகளை அடைத்து, முகப்பரு (acne) உருவாவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
பாக்டீரியா வளர்ச்சி: வியர்வை தோலில் நீண்ட நேரம் இருக்கும்போது, பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதற்கு ஒரு சூடான மற்றும் ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது. அதனால் கொப்புளங்களும் ஏற்படும் மற்றும் பருக்களுக்கு வழிவகுக்கும்.
உப்புத்துகள்கள்: வியர்வையில் உள்ள உப்புத் துகள்கள் வியர்வை ஆவியாகும் போது உப்பு தோலின் மேற்பரப்பில் படிந்து, எரிச்சலை ஏற்படுத்தும் இவை மருத்துத்துறையில் அறிவியல் ஆய்வின் மூலம் வெளியான ஒன்று ஆகும்.
வியர்வையும் கழிவுதான்
சிறுநீர் போன்று வியர்வையும் ஒரு கழிவுதான் வியர்வையை முகத்தில் பூசுவதும் வியர்வை துடைத்த கைக்குட்டைகளை கழுவாமல் பயன்படுத்துவதும் தோல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் ஆனால் பிரதமர் குழத்தைகளின் முன்பு மூடநம்பிக்கையை விதைக்கிறார்.
முரண்பட்ட பதில்கள்
பிரதமர் நரேந்திர மோடி தனது “பளபளப்பான தோற்றம்” குறித்து இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில், இரண்டு வெவ்வேறு சூழல்களில் அளித்த பதில்கள், அவர் பொதுவெளியில் பேசும் விதத்தின் முரண்பாட்டையும், கடின உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவரது செய்தி காலப்போக்கில் எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.
பிரதமர் மோடி ஒரே கேள்விக்கு அளித்த இந்த முரண்பட்ட இரண்டு பதில்கள், அவரது பேச்சு சூழல் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம் விளம்பர உலகில் மக்களின் ‘ஆசீர்வாதத்தை’ தன் பொலிவிற்குக் காரணமாகக் கூறுகிறார், மறுபுறம் குழந்தைகள் மத்தியில் ‘வியர்வை மசாஜ்’ என்ற அறிவியலுக்கு முரணான கருத்தை கடின உழைப்புடன் தொடர்புபடுத்துகிறார்.
இந்த இரண்டு பதில்களிலும், ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் பேசும்போது இருக்க வேண்டிய பொறுப்பு மற்றும் தகவல் நிலைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. விளம்பர நோக்கு, அரசியல் பிம்பம் அல்லது வெறும் கவர்ச்சிகரமான பேச்சு என எதுவாக இருந்தாலும், குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவது ஆரோக்கியமானதல்ல
