பாட்னா, நவ.7- வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ராமரை வெறுக்கிறார் என்று பீகாரில் நடந்த 2-ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
வளர்ச்சி ஏற்படவில்லை
பீகார் சட்டசபை தேர் தலையொட்டி, அராரியா மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அதில் அவர் பேசியதாவது
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் 15 ஆண்டுகால காட் டாட்சி நடந்தபோது எந்த வளர்ச்சியும் ஏற் படவில்லை. நெடுஞ்சாலை யோ, பாலங்களோ கட்டப் படவில்லை. எந்த உயர் கல்வி மய்யங்களும் அமைக்கப்படவில்லை.
ஆனால், நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி,அந்த சகாப்தத்தில் இருந்து பீகாரை விடுவிக்க கடுமையாக பாடுபட்டது. இன்று பீகாரில் எண்ணற்ற விரைவுச்சாலைகள், பாலங்கள், 4 மத்திய பல்கலைக்கழகங்கள், இதர உயர் கல்வி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா கூட்டணியால் தான் இந்த வளர்ச்சி பயணம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய முடியும்.
ஊடுருவல்காரரை வெளியேற்றுவோம்
இந்த வளர்ச்சி பயணத் தில் ஊடுருவல் என்ற மிகப்பெரிய சவாலை எங்கள் கூட்டணி சந்தித் துள்ளது. ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டை விட்டு வெளியேற்ற உறுதி பூண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதள கூட்டணி, அவர்களை பாதுகாக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக அரசியல் பயணங்கள் நடத்துகிறது. திசை திருப்பும் கட்டுக்கதைகளை பரப்புகிறது.
எப்போதெல்லாம் ராஷ்டிரீய ஜனதாதளம் பதவியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஊடுருவல்காரர்களை பின்வாசல் வழியாக அனுமதிக்கும். வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்கிறது.ஆனால் நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நம் மக்களுக்கு சொந்தமான அனைத்திலும் ஊடுருவல் காரர்கள் பங்கு கோரு கிறார்கள்.
ராமர் கோவில்
காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி), சாத் பூஜையை நாடகம் என்கிறார். அவர்கள் அயோத்தி சென்று ராமரை தரிசித்தது இல்லை. வாக்கு அரசியலுக்காக அவர்கள் ராமரை வெறுக்கிறார்கள்.
ஆனால், நிஷாத் ராஜ், மாதா சாப்ரி, மகரிஷி வால்மீகி ஆகியோருக்கான சன்னதிகளில் கூட தரிசனம் செய்ய மன மில்லை. இது, பட்டியல் இனத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான அவர்களின் வெறுப்பை காட்டுகிறது.
உட்கட்சி பூசல்
காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் இடையே உட்பூசல் நிலவுகிறது. தேர்தலுக்கு பிறகு, அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒருவரையொருவர் மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.
தற்போது, அவர்களின் துணை முதலமைச்சர் வேட்பாளரே காட்டாட் சிக்கு எதிராக பேசும் அளவுக்கு சண்டை உச் சத்தை எட்டி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இவ்வாறு தொடர்ந்து பிரதமர் பாகல்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
