சிட்கோ தொழிற்பேட்டை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு தொழில் மனைப் பட்டா

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை,மே13- சிட்கோ தொழிற் பேட்டை மனை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு, தொழில் மனைப் பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கியுள்ளார். சிட்கோ தொழிற் பேட்டையில் மனை ஒதுக்கீட்டு தாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 208தொழில்முனைவோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைப் பட்டாக்களை வழங்கி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய தாவது: 1970இல் மேனாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில், குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் 14,983 தொழில் மனைகளுடன், 127 தொழிற் பேட்டைகள் இயங்கிவருகின்றன. 60 தொழிற்பேட்டைகளில் உள்ள 3,700 ஏக்கர் நிலம், அரசு புறம்போக்கு வகைப்பாட்டில் இருப்பதால், தொழில் நிறுவனங்கள் கிரயப் பத்திரம் பெற்றி ருந்தாலும், பட்டா பெற முடியாத நிலை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இதனால், தொழில்முனைவோர் நிலத்தை அடமானம் வைத்து, கடன் பெற முடியாமல், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். திமுக அரசு பொறுப்பேற்றதும், இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண வேண்டுமென அரசிடம் தொழில்முனைவோர் கோரிக்கை வைத்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைகளின் மீது விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு, நில வகைப்பாட்டை மாற்ற 2021 நவ. 30ஆம் தேதி தலைமைச் செயலர் தலை மையில், அதிகாரம் அளிக்கப் பட்ட குழுவை அமைத்து உத்தர விட்டார்.

இந்தக் குழு முதல்கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில், 1,569ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டை மாற்றி,  பட்டா வழங்கப் பரிந்துரைத்தது. அதன்படி அரசாணைகள் வெளியிடப் பட்டன. இதனடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம், பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டையைச் சேர்ந்த 5 தொழில் முனைவோருக்கு பட்டா வழங்கி, இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

70 ஏக்கர் நிலத்துக்கு பட்டா:

அதன் தொடர்ச்சியாக, தற்போது 9 தொழிற்பேட்டைகளில் உள்ள, 208 தொழில்முனைவோருக்கு 70 ஏக்கர் பரப்பிலான நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற்பேட்டையில் சுகாதாரப் பணி களை மேற்கொள்ளும் 25 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகளையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துறைச் செயலர் வி.அருண்ராய், சிட்கோமேலாண்மை இயக்குநர் சோ.மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *