சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரும் 9.11.2025 அன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் அரங்கத்தில் “பெரியாரும்- சிங்கப்பூரும்” என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் ‘‘பெரியார் விழா 2025” நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (6.11.2025) சிங்கை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், தமிழர் தலைவருக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் மதியுரைஞர் வி.கலைச்செல்வன், தலைவர் க.பூபாலன், செயலாளர் தமிழ்ச் செல்வி ராஜராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். சிங்கப்பூர் தமிழவேள் மன்றத்தின் செயலாளரும், ‘செம்மொழி’ இதழின் ஆசிரியருமான இலியாஸும், அவரது வாழ்விணையரும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மன்றத்தின் உட்கணக்காய்வாளர் நா.மாறன், செயற்குழு உறுப்பினர்கள் வீ.கவிதா, ச.ராஜராஜன், மன்ற உறுப்பினர் அதியமான், பெரியார் பிஞ்சு அகரன் ஆகியோர் விமான நிலையத்துக்கு வந்திருந்து, தமிழர் தலைவரை வரவேற்றனர். உடன் தமிழர் தலைவர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளனர்.
