தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரச வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள், புகையிலைப் பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ‘புகையிலை இல்லா சமுதாயம்’ ஒன்றைப் படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?
