சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் படு குழப்பம் பெரும்பாலான இடங்களில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை தி.மு.க. பகிரங்க குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ.6- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பல குழப் பங்கள் உள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது.

குழப்பம்

சென்னை அண்ணா அறிவாலயத் தில் தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ நேற்று ெசய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.அய்.ஆர்.) தொடங்கியுள்ள நிலையில் அதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில், பி.எல்.ஓ.க்கள் என அழைக்கப்படும் அதிகாரிகள் எந்த இடத்துக்கும் வந்து கணக்கீடு படிவங்களை தரவில்லை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு தொகுதிகளில் பி. எல்.ஓ.க்கள் படிவங்களை கொண்டு வந்து கொடுத்து விட்டு, மறுநாளே பூர்த்தி செய்துதர வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து மீண்டும் பெறுவதற்கு ஒருமாத அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மறுநாளே படிவங்களை திருப்பித் தரக் கேட்பது சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல.

விதிமீறல்கள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அதிகமாக இருக்கும். மேலும் பிப்ரவரி 2026 வரை நடக்கவிருக்கும் இந்தப் பணிகளுக்கு இடையில் கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்கள் வருகின்றன. இக்காலங்களில் ஊழியர்களாக இருக்கட்டும் வாக் காளர்களாக இருக்கட்டும், களத்தில் இருந்து பணிகளை செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் அறிந்திருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில் விதி மீறல்களும், சட்ட மீறல்களும் இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்த எஸ்.அய்.ஆரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைத்து, பி.எல்.ஏ. 2 க்களுக்கு உரிய பயிற் சியை நாங்கள் கட்சி சார்பாக அளித்திருக் கிறோம்.

தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், வாக்காளர் களின் வாக்குகளை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காக தி.மு.க.வில் ஓர் அணியை தொடங்கி இருக்கிறோம். எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக்கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகும். அ.தி.மு.க.வுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்.அய்.ஆரை ஆதரிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *