காட்மண்ட், நவ. 6- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதில் CPN (மாவோயிஸ்ட் மய்யம்), CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சிகளும் அடங்கும்.
CPN (மாவோயிஸ்ட் மய்யம்) கட்சியின் தலைவரும், மேனாள் பிரதமருமான புஷ்பகமல் தஹால் பிரசந்தா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி தலைவர் மாதவ் குமார் நேபாள் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான கம்யூஸ்ட் கட்சிகளில் உள்ள மாவோயிஸ்ட் பெயர் கைவிடப்படுகிறது. முக்கியமாக மாவோயிஸ்ட் மய்யம் கட்சி கைவிடுகிறது.
