பாட்னா, நவ. 6- பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் வால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியதாவது:-
எதிர்காலத்தில்
தேர்தல் நடக்குமா?
அரியானாவில் நடந்த வாக்குத் திருட்டு பற்றி என் சகோதரர் ராகுல்காந்தி எடுத்துக் கூறினார். வாக்குத் திருட்டு மூலம் பீகாரில் ஆட்சி அமைக்க பா.ஜனதா கூட்டணி விரும்புகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பெண்கள் உள்பட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது.
பா.ஜனதா கூட்டணி எல்லாவற் றையும் அழித்து வருகிறது. தற் போதைய சூழ்நிலை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை போல் இருக்கிறது. எதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்று தெரியவில்லை. இன்னும் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்? அவர்களை ஆட்சியை விட்டு விரட்டுங்கள்.
பிரதமர் மோடிக்கு ஊழல் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதை விட காங்கிரஸ் சுவரொட்டியில் தேஜஸ்வி யாதவ் ஒளிப்படம் ஏன் இல்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது.
அதே சமயத்தில், பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமாரைக்கூட பிரதமர் மோடி தன்னுடன் மேடையில் வைத்துக்கொள்வது இல்லை.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகார் மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். ஏழை குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை அளிக்க முயற்சி செய்வோம். பல்வேறு துறைகளில் காலியிடங்களை நிரப்பு வோம்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் அனைத்து தொழிற் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. அவர்களின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். கார்ப்ப ரேட்களுக்கு வளங்களை தாரைவார்ப்பவர்கள், ஏழைகளுக்காக பாடுபட மாட் டார்கள்.
விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு, வரி ஆகியவை காரணமாக விவசாயிகளால் வருமானத்தை பெருக்க முடியவில்லை. வேலை யில்லா திண்டாட்டத்தால், பீகார் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
