புதுடில்லி, நவ.5- கடந்த 2015 முதல் 2025 வரை ஒட்டுமொத்தமாக 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப் பட்ட நிலையில், 1.33 லட்சம் குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
ஆனால், 50,771 குழந்தைகளின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும், அதாவது, காணாமல் போகும் மூன்று பேரில் ஒருவரை கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில், 18,063 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 18,197 பேரும், 2024ஆம் ஆண்டில் 19,047 பேரும் காணாமல் போயிருந்தனர்.
கரோனா காலத்தில் மட்டும்தான் இந்த அளவு 13 ஆயிரம் ஆகக் குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளன.
குறிப்பாக, காணாமல் போன குழந்தைகளின் ஆண் பிள்ளைகளை விட சிறுமிகளும் பெண் குழந்தைகளுமே அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை 98,036 பெண் குழந்தைகளும் 86,368 ஆண் பிள்ளைகளும் காணாமல் போயிருப்பதகாவும், இதுவரை 70,696 பெண் பிள்ளைகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 27 ஆயிரம் பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
