பாட்னா, நவ.5 அய்க்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன், ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.
பீகாரில் அவரது நாடாளுமன்றத் தொகுதியான முங்கருக்கு உட்பட்ட மொகாமா சட்டமன்றத் தொகுதி அய்க்கிய ஜனதாதள வேட்பாளர் ஆனந்த் சிங், அண்மையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’
இந்நிலையில், மொகாமா தொகுதியில் பிரசாரத் தின்போது ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாக ஒரு காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகி யுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தத் தொகுதியில் சிலர் இருக்கி றார்கள். தேர்தல் நாளில் அவர்களை நீங்கள் வெளியே வரவிடக்கூடாது. அவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள்.
ஒருவேளை அவர்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், அவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் வாக்களித்ததை உறுதி செய்த பிறகு அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
