அடுத்தடுத்து நூற்றாண்டுகளின் சிறப்பு விழாக்கள்!

2 Min Read

அரசியல்

1923, 1924, 1925 ஆம் ஆண்டுகள் நம் இயக்கத்தில் முக்கியமான ஆண்டுகள்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா –

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – 

சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு –

சிந்து சமவெளி அகழாய்வுகள்மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டுகளுக்கான நூற்றாண்டுகள் வர உள்ளன.

இவையெல்லாம் நிகழ்ச்சிகளுக்கான, அமைப்புகளுக் கான நூற்றாண்டு விழா!

இன்னொரு மிக முக்கிய நூற்றாண்டு விழா – நமது முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3 ஆம் தேதி தொடக்கம்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கவேண்டும் என்பதற்கான அனைத்து ஜாதியினருக்கு மான அர்ச்சகர் உரிமை சட்டம் கொண்டு வந்தவர்.

உச்சநீதிமன்றம் காரணமாக அது முடக்கப்பட்ட நிலையில், தந்தை பெரியார் இருக்கும்போதே, அது செயல்பாட்டுக்கு வர முடியாத நிலை!

அதைத்தான் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்து விட்டோமே என்று கலங்கினார் கலைஞர்.

ஆனால், தந்தை பெரியார் போராடியதை – முத்தமி ழறிஞர் கலைஞர் விரும்பியதை – முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரான நிலையில், அதனை நிறைவேற்றிக் காட்டினார் (பலத்த கரவொலி).

தந்தை பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை அளிக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் விரும்பினார்.

பெரியார் எந்த அரசு பதவியிலும் இல்லை. அப்படிப் பட்டவருக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை, மரபும் இல்லை என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது, 

‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை அளித்ததால் என் ஆட்சி கவிழ்க்கப்படுமானால், அதற்கு நான் தயார் – எனக்குப் பெருமையும்கூட!” என்று சொன்னவரின் நூற் றாண்டு விழாதான் வரும் ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது!

அதனை சிறப்பாக நடத்துவோம் – கொண்டாடுவோம்!

– ஈரோடு திராவிடர் கழகப் 

பொதுக்குழுவில்  (13.5.2023)

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *