டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகாரில் பேசியது போல தமிழ்நாட்டில் பேச மோடிக்கு தைரியம் உண்டா? – தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மருத்துவ முதுகலை படிப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு: ஆணை பிறப்பித்தது தெலங்கானா அரசு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி எம்விஏ கூட்டணியில் சேர்த்திட சரத்பவார் காங்கிரஸ் ஒப்புதலை நாடி யுள்ளார்.
தி இந்து:
* தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த விவகாரம்: தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
* “பீகாரை பாஜக-ஜே.டி.யு கூட்டணி, புலம்பெயர்வுத் தளமாக மாற்றிவிட்டனர்” – பாஜக-ஜே.டி.யு கூட்டணி கடந்த இருபது ஆண்டுகளில் பீகாரின் தொழில் அடித்தளத்தை திட்டமிட்டு சீரழித்து விட்டது. ஒரு காலத்தில் சர்க்கரை, காகிதம், ஜூட், பட்டு, பால் தொழில்களில் முன்னணியில் இருந்த பீகார், இன்று வேலையின்மை மற்றும் இடப் பெயர்வு எனப் பெயர் பெற்றுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி எப்போதும் “என்னை, நாட்டை, பீகாரை அவமதிக்கிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதை நையாண்டியாக விமர்சித்த பிரியங்கா காந்தி, “அப்படியானால் ‘அவமதிப்பு அமைச்சகம்’ ஒன்றைத் தொடங்குங்கள்” என பிரியங்கா காந்தி பேச்சு. பீகாரில் நடைபெற்ற தொடர் பொதுக்கூட்டங்களில் அவர், வேலையின்மை, ஊழல், வறுமை போன்ற உண்மை பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதற்காக மோடி அரசியல் எதிரிகளை குறி வைக்கிறார் என்று குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தீர்ப்பாயச் சட்டத்தை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறு ஒன்றிய அரசு வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம், கடுமையாகக் கண்டித்தது. “என் அமர்வை தவிர்க்க ஒன்றிய அரசு முயல்கிறது போல,” என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார்.
* மனுதாரர்கள் முழுமையாக வாதித்த பின் நள்ளிரவில் மனு தாக்கல் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்தார். வழக்கு மீதான விசாரணை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
– குடந்தை கருணா
