திருவாரூர், நவ. 4- 01.11.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் மு.இளமாறன், கடவுள் மறுப்பு கூறினார் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ். ப.க.மாவட்ட தலைவர் அரங்க.ஈவேரா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ. உமாநாத், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சாமிநாதன், இரா.மகேஸ்வரி, நகரத் தலைவர் கோ.சிவராமன், நகர செயலாளர் ப.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றியச் செயலாளர் சரவணன், திருவாரூர் ஒன்றியத் தலைவர் கவுதமன், ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர் இராஜேந்திரன், நன்னிலம் ப.க.ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் தன.சஞ்சீவி, குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், ஒன்றிய துணைத் தலைவர் அம்பேத்கர், ராவணன், க.தமிழ்நேயன், சந்திரன், மருதம்மாறன், தெய்வசிகாமணி, நகர மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா, செல்வேந்திரன், ரவிக்குமார், அறிவுச்சுடர், குடவாசல் அறிவுக்கரசு, வடுகக்குடி பழனிச்சாமி, பவித்ரமாணிக்கம் கணேசன், திராவிடமணி, கொரடாசேரி ஒன்றியம் துரைராஜ், ஸ்டாலின். திருவாரூர் ஒன்றிய மகளிர் அணி சோழங்கநல்லூர் க.சரோஜா, திருவாரூர் நகரம் சுரேசன், விளமல் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், பருத்தியூர் விஸ்வநாதன் திருணைப்பேர் கோவிந்தராஜ், ராஜேந்திரன், நன்னிலம் ராமசாமி, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.ரவிக் குமார், நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
திருவாரூர் ஒன்றியம் ஆமூர் அருமை நாதன், குடவாசல் இராமதாஸ், திமுக பகுத்தறிவு கலை இலக்கிய மாநில செயலாளர் அரங்க திருவிடம், கன்கொடுத்தவனிதம் ரத்தினம், பருத்தியூர் கலியபெருமாள், சுரேகன்னின்மாமியார் அல்லியம்கோரை ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் வீர வணக்கத்தையும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு திருவாரூர் மாவட்ட கழக சார்பில் நிதி திரட்டி டிசம்பர்-07 அன்று மாலை நன்னிலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை நன்னிலத்தில் டிசம்பர்-07 அன்று மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும். திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர், அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் இரா.மகேஸ்வரி, ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் சிறப்பு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் இளைஞரணி, மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்
இளைஞரணி
மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.பிளாட்டோ,- (வடுககுடி)
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.ரவிக்குமார், (குடவாசல்)
திராவிட மாணவர் கழகம்.
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் தே.அறிவழகன், (மாவூர்)
திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர் அ.அறிவுச்சுடர், (மஞ்சக்குடி)
