புதுடில்லி, நவ. 3- பீகார் சட்டசபை தேர்தல் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. 11ஆம் தேதி நடக்கும் 2ஆவது கட்ட தேர்த லுக்கான 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டி யலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மேனாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், பூபேஷ் பாகல், சச்சின் பைலட், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், இமாசலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், தாரிக் அன்வர், திக் விஜய்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுயேச்சை எம்.பி. பப்பு உள்பட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
