கொலஸ்ட்ரால் அறிவோம்!

2 Min Read

மருத்துவம்

டாக்டர்
பாரத்குரு

கொலஸ்ட்ரால் என்பது – நமது உடலில் ஏற்படும் பல்வேறு செயல்களுக்கு தேவைப்படும் ஒரு வகையான கொழுப்புச் சத்தாகும். இந்த கொலஸ் ட்ரால் நமது இரத்தத்தில் இரு வழிகளில் வந்து கலக்கின்றது.

  1. நமது கல்லீரல் நமது உடம்பு செய லாற்ற தேவையான கொலஸ்ட்ராலினை தயாரிக்கின்றது. இதனை கொண்டு திசுக்களினை உருவாக்குவதற்கு, விட்டமின் மற்றும ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் உதவுகின்றது.
  2. கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவுகளின் மூலம் நம் இரத்தத்தில் வந்து சேர்கின்றது. பெரும்பான்மையாக எண்ணை, மாமிச உணவுகள், பால் மற்றும் முட்டையில் அதிகமாக கொலஸ்ட்ரால் நிரம்பியுள்ளது.

தேவைக்கதிமாக கொலஸ்ட்ரால் நமது உடலில் சேர்ந்தால் பல வியாதிகள், குறிப்பாக. STROKE (பக்கவாதம்) மற்றும் HEART ATTACK (மாரடைப்பு) ஏற்படக் கூடும். கொலஸ்ட்ரால் முக்கியமாக நான்கு பிரிவுகளாக நமது உடலில் உள்ளது.

  1. HDL எனப்படும் High Density Liporotein அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இந்த HDL, தேவைக்கு அதிகமாக புழக்கத்தில் உள்ள கொழுப்புகளை கல்லீரலுக்கு கொண்டு சேர்க்கிறது.
  2. LDL எனப்படும் Low Density Lipoprotein அல்லது (கெட்ட கொலஸ்ட்ரால்) LDL கொழுப்புகளை இரத்தத்தில் அதிகரிக்க செய்து, உபரி கொழுப்புகளை இரத்த குழாய்களில் படியச் செய்து அடைப்புகளை உருவாக்குகிறது.
  3. VLDL எனப்படும் Very Low Density Lipoprotein இதுவும் LDL போலவே டிஜில் எனப்படும் TRIGLYCERIDES இணை கொண்டு செல்கின்றது.
  4. TRIGLYCERIDES

நாம் உட்கொள்ளும் அதிகமான உணவு களின் காரணமாக தேைவக் கதிகமாக பெறப்படும் கலோரிகளை உடல் Triglycerides ஆக மாற்றி சேமிக்கின்றது. இதுவும் இருதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றது.

நமது உடலிலுள்ள பல வகையான கொல ஸ்ட்ரால் அளவினை Lipidprofile எனும் பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்து கொள் ளலாம். அளவுகள் அதிகமாக இருப்பின் அதனை Dyslipidemia எனக்கூறுவர்.

முதலாக உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

மற்ற நோய்கள் குறிப்பாக நீரிழிவு நோய் (Diabetes), இரத்த அழுத்தம் (Hypertens) உடையவர்கள் தங்களது கொழுப்பு அளவுகளை விரைவாக குறைப்பது நல்லது. உடனடியாக மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற்று தேவைப்பட்டால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளுதல் நன்று.

கொலஸ்ட்ரால் அளவினை குறைப்பது எப்படி?

  1. உடலின் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி / நடைபயிற்சி அவசியம்.
  3. நார்சத்து உள்ள உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
  4. Omega & Fatty Acids உள்ள மீன்களை உண்பது நல்லது.
  5. மாமிச உணவு குறிப்பாக ஆட்டிறைச்சி (Red Meat) தவிர்த்தல் மற்றும் Processed Foods-னை தவிர்க்க வேண்டும்.
  6. உணவில் சேர்க் கப்படும் எண்ணையின் அளவை குறைப்பது நல்லது.
  7. சோளம், கட லை, அவகேடோ முத லிய உணவுகளை உட் கொள்வது நல்லது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *