முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, நவ.3- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது உண்மையான வாக்கா ளர்களை நீக்குவதற்கான தந்திரம் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தந்திரம்
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
‘‘மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வித மாகவும், அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிர திருத்தப்பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடை பெற உள்ளது.
இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. இந்த சிறப்பு திருத்தப்பணி என்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்க வில்லை.
தொடர்ந்து போராடுவோம்
ஆனால், அதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்ட வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் அதை செய்ய வேண்டும். அப்போது தான் இந்த பணிகளை முறையாக செய்ய முடியும்.
மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப்பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கு வதற்கான தந்திரமாக மட்டுமே பார்க்கிறோம்.
இந்த பின்னணியில்தான் பீகாரில் சிறப்பு திருத்தப்பணியை செய்தார்கள். இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். அதனால்தான் இதனை முழுமையாக எதிர்க்கி றோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிணைந்து
குரல் கொடுப்பது கடமை
அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக்கட்சிகளின் கடமை.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை குழப்பங்கள், அய்யங்கள் இல்லாமல் போதிய காலஅவகாசத்துடன், 2026 பொதுத்தேர்லு லுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி உள்ளோம்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் இதுகுறித்து விவாதித்து, ஜனநாயகத்தை காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறி உள்ளார்.
