புதுடில்லி, நவ. 26- உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவவேண்டும் என்ற விசிக கோரிக்கை நிறைவேறுகிறது
கடந்த 2022 டிசம்பர் 28 ஆம் நாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்க ளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமி ழர் தொல்.திருமாவளவன் மற் றும் நாடாளுமன்ற விசிக உறுப் பினர் ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கடிதம் எழுதினர்.
அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு :
”டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாகவும் இருந்தார். அவர் இந்தியாவில் உள்ள சட்ட நிறு வனங்களில் ஒரு முக்கிய அங்க மாக இருந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை யாகும். இருந்தும், இந்திய உச்ச நீதிமன்றம் அவரைப் போது மான அளவில் அங்கீகரிக்க வில்லை, டாக்டர் அம்பேத்கரின் சிலை இன்னும் உச்சநீதிமன்ற வளாகத்தில் நிறுவப்படவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் புல்வெளிகளில் அவரது சிலை யைக் காண்கிறோம், அது உச்ச நீதிமன்றத்தில் காணப்படாதது வருத்தமளிக்கிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை இந்திய உச்சநீதிமன்ற வளாகத் துக்குள் அமைக்க வேண்டும், அம்பேத்கரின் 132ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 14, 2023 க்குள் அதைச் செய்தால் சிறப்பாக இருக்கும் என இக்கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கி றேன்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும் என்று ஏற்கெனவே கடிதம் அளித் துள்ள ’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் குழுவின்’ கோரிக்கைக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில், BALSJ உறுப்பினர்கள் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவ ரான டாடர் பி.ஆர்.அம்பேத்க ரின் நினைவை உச்சநீதிமன்றம் உரியவகையில் சிறப்பிக்க வேண் டும் என தொடர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் படம் வைக்கப் படுவதற்கு அவர்களின் முயற்சிகளே காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எம்.சி.செடல்வாட் மற்றும் ஆர்.கே.ஜெயின் போன்ற பல வழக்குரைஞர்களின் படங்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள் ளன. உச்சநீதிமன்றம் அமைவதற்குக் காரணமான அரசமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் படம் அங்கு 7 ஆண்டுகளுக்கு முன்புதான் இடம்பெற் றது என்பது மிகவும் வருத்தத் திற்குரியதாகும் இனியும் தாம திக்காமல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையை விரைவில் நிறுவுவது தான் சரியானது.
BALSJ இன் கடிதத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத் கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக உச்ச நீதிமன்ற வளாகம் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிகிறது. வரும் ஆண் டில் அவரது சிலைக்கு அருகில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந் தால் அது சிறப்பாக இருக்கும்.
சமீபத்தில் டாக்டர் அம்பேத் கரின் நினைவுநாள் நிகழ்வின் போது வழக்குரைஞர்களுடன் உரையாடியபோது, “நான் இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தனிப்பட்ட முறையில், டாக்டர் அம்பேத் கர்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.நமது அரசமைப்புச் சட் டத்தை உருவாக்கியவர் அம் பேத்கர். இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது அவரு டைய தொலைநோக்குப் பார் வையால்தான்” எனத் தாங்கள் தெரிவித்தீர்கள். டாக்டர் அம் பேதகரின் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற BALSJ இன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போது, அதை பரிசீலிப்பதாகக் கூறினீர்கள். எனவே, மேற்கண்ட கோரிக்கை தங்களால் கவனத் தில் கொள்ளப்படும் என்று நான் முழு மனதுடன் நம்புகி றேன்.
டாக்டர் அம்பேத்கர் ஒரு மேதை மற்றும் அரசியல் நிர் ணய சபையின் ஒருங்கிணைந்த பகுதி மட்டுமல்லாமல், பல அம் சங்களில் பாகுபாடுகளை எதிர் கொள்ளும் பகுஜன் மக்களுக் கான நம்பிக்கையையும் அடை யாளப்படுத்துகிறார்.
சமூக நீதியின் சின்னமாகத் திகழும் அவரது சிலை நீதி என்னும் கருத்தாக்கத்துக்கும் நடைமுறைக்கும் பிரதானமான அமைப்பாகத் திகழும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிறுவப் படுவது விளிம்பு நிலை சமூகத்தி னருக்கு மிகப்பெ ரும் நம்பிக் கையை ஏற்படுத்தும்” என்று அந்த கடிதத்தில் வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசமைப்புச் சட்ட நாளான இன்று (26.11.2023) உச்சநீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை நிறுவப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.