புதுடில்லி, நவ. 2– இந்திய ரயில்வே நிர்வாகம் லோயர் பெர்த் களுக்கான புதிய விதிமுறைகளை இப்போது வெளியிட்டுள்ளது.
லோயர் பெர்த் யாருக்கு கிடைக்கும்?
பெரும்பாலும் கீழ் படுக்கை (லோயர் பெர்த்கள்) அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால், தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் அந்த பெர்த் கிடைப்பது அவசிய மில்லை. ரயில்வே நிர்வாகத்தின் கணினி பதிவு முறைப்படி, லோயர் பெர்த்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கே வழங்கப்படுகின்றன.
லோயர் பெர்த்களைத் தேர்வு செய்யும்போது, அந்த பெர்த்களில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே அவை தேர்வர்களுக்கு ஒதுக்கப்படும்.
ஒருவேளை, லோயர் பெர்த் தேர்வர்ளுக்கு வழங்கப்பட் டிருந்தாலும், மூத்த குடிமக்களுக்குப் அப்பர் அல்லது மிடில் பெர்த் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதை மாற்றுவதற்கான உரிமை ரயில்வே அதிகாரிகளுக்கு உண்டு.
அடுத்ததாக, முன்பதிவு ரயில் பெட்டிகளில், இரவு 10 மணி – காலை 6 மணி வரையில் தூங்கும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் லோயர் பெர்த்துகளில் இருப்பவர்களை அப்பர் பெர்த் மற்றும் மிடில் பெர்த்துகளில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது.
இதே தான் பக்க கீழ்படுக்கை (சைட் லோயர்) மற்றும் பக்க மேல் படுக்கைகளுக்கும் பொருந்தும். மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் பக்க கீழ் படுக்கையில் இருப்பவர்களை மேல் படுக்கையாளர்கள் ‘கீழ் படுக்கைகளில் உட்கார வேண்டும்’ என்று தொந்தரவு செய்யக்கூடாது.
