ரூ.19 கோடியில் 87 புதிய மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, நவ.2 தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்களை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதித் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘108 அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்)’ சேவையை கடந்த 2008 செப்.15-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத் தார். EMRI GHS என்ற தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்து ணர்வு ஒப்பந்தத்தின் அடிப் படையில் 108 மருத்துவ அவசர ஊர்திகள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1,353 அவசரகால ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இந்த சேவை மூலம் கர்ப்பிணிகள், சாலை விபத்துகளில் காய மடைந்தவர்கள், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என 85.98 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த சேவையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.18.90 கோடியில் 87 புதிய ‘108’ மருத்துவ அவசர ஊர்திகள்களை சென்னை தலைமைச் செயலகத் தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பணிநியமன ஆணை

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு 36 பேர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர், உதவி வரைவாளர் பணியி டங்களுக்கு 24 பேர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்

வாணையம் (டிஎன்பி எஸ்சி) வாயிலாக தேர்வு செய் யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமனம்வழங்கும் அடையாளமாக பணிநியமன ஆணைகளையும் முதல மைச்சர் வழங்கினார்.

நிலம் ஒதுக்கீடு

சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் விருது நகர், தேனி, திருவள்ளூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் முஸ்லிம் களுக்கான அரசு பொது கபர்ஸ்தான்களும் (நல்லடக்கத்தலம்), மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கான அரசு பொதுக் கல்லறைத் தோட்டங்களும் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர், பெயர்ப் பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துபராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கும் விதமாக அதற் கான ஆணையையும் அலு வலர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *