தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் களின் ஓய்வூதியத்தை உயர்த் துவது, சிறு குற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறை வேற்றப்பட்டு அனுப்பி வைக்கப் பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.
தீபாவளியின் பரிசா?
17 லட்சம் உயிர்களை
காவு வாங்கிய காற்று மாசு
காவு வாங்கிய காற்று மாசு
டில்லியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காற்று மாசு உயிர் இழப்புகள் குறித்து அதிர்ச்சி ஆய்வு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகி யுள்ளதாக The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளி யிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ஆம் ஆண்டிலிருந்து 38 விழுக்காடு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மனிதத்தை விட சிறந்தது வேறேதும் உண்டோ!
நகரும் ரயிலை பிடிக்க முடி யாமல், மாற்றுத்திறனாளி ஒருவர் கஷ்டப்படுகிறார். அவரின் இன்னலை கவனித்த ஒரு காவலர், அந்த மாற்றுத்திறனாளியை தனது தோளில் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடி, அவரை ரயிலில் ஏற்றி விட்டு, சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். மனிதத்தை விட சிறந்தது வேறொன்றும் இல்லை என்பதை இந்த காவலர் நிரூபித்து விட்டார்.
உங்கள் குழந்தை
மண் சாப்பிடுகிறதா?
இதான் காரணம்!
மண் சாப்பிடுகிறதா?
இதான் காரணம்!
கையில் கிடைப்பதை வாயில் போடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அப்படி வாயில் போடும் பொருளில் சுவை இல்லை என தெரிந்தால் அதனை மீண்டும் செய்யாது. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மண், சாம்பலை அடிக்கடி உண்ணும். அப்படி செய்தால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் பூச்சி தொல்லை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை இருக்கலாம் என மருத்துவர் கூறுகின்றனர்.
1.12 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்
ஏ.அய்.இன் வரவால், நடப் பாண்டில் இதுவரை பன்னாட்டு அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக யு.பி.எஸ்., 48,000, அய்.என்.டி.இ.எல். 24,000, டி.சி.எஸ். 20,000, அமேசான் 14,000ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. அய்.டி., கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
ரயில்வேயில்
2,569 பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்
2,569 பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியா முழுவதும் Junior Engineer, Depot Material Superintendent 2 காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித் துள்ளது. மொத்த பணியிடங்கள் 2,569. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் 160 பணி யிடங்கள். விருப்ப முள்ளவர்கள் 30.11.2025 2 rrbchennai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
